திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 நவம்பர் 2018 (19:28 IST)

பாலியல் தொல்லை பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்பல படங்களில் நடித்து தன் திறமை நிரூபித்திருந்தார்.சமீபத்தில் ரிலீசான வட சென்னை படத்திலும் தன் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.இப்போது இந்தியாவில் கிளம்பியிருக்கும் மீடூ விவகாரம் குறித்து அவர் கருத்து கூறியிருக்கிறார்.
அவர் கூறியதாவது :
 
'நான் சினிமாவுக்குள் நுழைந்த நாளில் இருந்து இதுநாள் வரை எனக்கு யாரும் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. எனவே இவ்விவகாரம் பற்றி என்னால் கருத்து எதுவும் கூற இயலாது. ஆனால் தவறு செய்தவர்களின் முகத்திரை கிழியப்பட வேண்டும்' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.