1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (19:33 IST)

வட சென்னை முதல் நாள் அதிரடி மாஸ் வசூல் - திணறும் பாக்ஸ் ஆபீஸ்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும்ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிப்பில் இன்று மிக பிரமாண்டமாக வெளியாகியுள்ள வடசென்னை படத்திற்கு டுவிட்டரில் ரசிகா்கள் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 
 
பல வருட உழைப்பின் பலனை கொடுத்துள்ள வட சென்னை படத்தின்  இயக்குனர் வெற்றிமாறன் மன நிறைவுடன் இருக்கிறார். மேலும்  இந்த படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்கள் எல்லோராலும் பாராட்டப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்றே வெளிநாடுகளில் வெளியான இப்படம் அங்கேயும் விமர்சனத்திலும்  வசூலிலும் கலக்கி வருகிறது. அங்கு நேற்று மட்டும் ரூ. 29 லட்சம் வசூலித்துள்ளது. தனுஷ் படத்திற்கு வெளிநாட்டில் இவ்வளவு வசூல் கொடுத்திருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.