திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (08:11 IST)

மீடூ விவகாரம்: 48 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய கூகுள்

கடந்த சில நாட்களாக மீடு விவகாரம் தமிழ் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திரையுலகம் மட்டுமின்றி தற்போது அனைத்து துறைகளிலும் மீடூ குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மீடூ குற்றச்சாட்டால் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த 48 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்களில் 13 பேர் சீனியர் ஊழியர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை கூறியபோது, ' ‘கடந்த 2 ஆண்டுகளில், பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கு உள்ளான 13 சீனியர் ஊழியர்கள் உட்பட 48 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாருக்கும் செட்டில் மெண்ட் தொகை எதுவும் கொடுக்கப்படவில்லை. எந்த நிலையில் உள்ள அதிகாரிகள் தவறு செய்தாலும் அவர்களின் தவறுதலான நடத்தைக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கூகுள் நிறுவனம் போன்றே இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்களில் மீடூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது