1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 23 அக்டோபர் 2018 (11:40 IST)

என் தந்தை எந்த பப்புக்கும் போனதில்லை- சுருதிக்கு அர்ஜுன் மகள் ஆவேச பதிலடி

நடிகர் அர்ஜுன் மீது நிபுணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கன்னட நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்,  தன்னை அர்ஜுன் பாடல் காட்சிகள் இறுக்கமாக கட்டிப்பிடித்ததாகவும், இரவு விருந்துகளுக்கு (பார்ட்டிக்கு) அழைத்தாகவும் குற்றம்சாட்டினார்.


மீடு இயக்கம் மூலம் சுருதி ஹரிகரன் கிளப்பிய இந்த விவகாரம்தான் கர்நாடகாவில் புயலை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் தனது தந்தைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்,. இது தொடர்பாக அவர் கூறுகையில, "எனது தந்தை மீது இதுவரை எந்த ஒரு பாலியல் புகாரையும் கேள்விப்படதில்லை.  மீடு இயக்கத்தை சிலரது ஆதரவுடன் சிலருக்கு
எதிராக தவறாக கொண்டு செல்கிறார்கள். இப்போது செயல்படுவது மீடு இயக்கமே கிடையாது. சுருதியின் புகார் எங்களை காயப்படுத்தியுள்ளது. என் தந்தை அர்ஜுன் பன்மொழிகளில் பிரபலமான நடிகர், அவர் மீது வேண்டுமென்றே விளம்பரத்துக்காக சுருதி புகார் தெரிவித்துள்ளார்,  என் தந்தை பார்ட்டிக்கு அழைத்தாக ஸ்ருதி கூறுகிறார். ஆனால் எனது தந்தை இதுவரை எந்த பார்டிக்கும், பப்புக்கும் சென்றதில்லை" இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளார்,