தீவிர யோகாவில் இறங்கிய தனுஷ் மனைவி - இணையத்தை அசத்தும் புகைப்படம்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தடம் பதித்து வெற்றியை நிலைநாட்டினார். அதுமட்டுமின்றி பரதநாட்டிய நடனர் மற்றும் பின்னணி பாடகியாக சிறந்து விளங்கி வருகிறார்.
இருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஐஸ்வர்யா தனுஷ் இந்த கொரோனா ஊரடங்கில் யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம் உடையில் உடலை வளைத்து நெளித்து ரப்பர் போல ஒர்க் அவர் செய்த புகைப்படங்களை வெளியிட்டு,
"இதுபோன்ற காலங்களில் உடல் ரீதியாகவும், கவனமாகவும் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி என்னால் போதுமானதாக பேச முடியாது .. நீங்கள் உங்களை வீட்டிலேயே கவனித்துக்கொள்கிறீர்கள், பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் தவறாமல் பின்பற்றும் பழக்கவழக்கங்களை நீங்களும் செய்வீர்கள் என்பதைக் காணும் அளவுக்கு இன்னும் அதிகமாகப் இதுபோன்று உங்களுடன் பகிர்வதை நான் விரும்புகிறேன்" என அக்கறையுடன் பதிவிட்டுள்ளார்.