வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (15:04 IST)

டாப் ஹீரோஸுடன் செக்கெண்ட் இன்னிங்ஸ்-க்கு ரெடியான ஹன்சிகா!

கோலிவுட்டில் மீண்டும் தன்னை நிலைநாட்டிக்கொள்ள ஹன்சிகாவிற்கு தனுஷ் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 
தமிழ் திரையுலகில் தற்போது பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ஹீரோ என்றால் அந்தப் பட்டியலின் தனுஷ் பெயர் கண்டிப்பாக இருக்கும். தனுஷ் நடித்து முடித்த ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதுமட்டுமின்றி அடுத்து ஆறு திரைப்படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளிவந்தது. 
 
இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக படங்களே இல்லாம் இருந்த ஹன்சிகாவிற்கு சொல்லுக்கொள்ள ஒரே படமாக மஹா இருந்தது. இந்த படத்தில் சிம்புவும் நடித்திருக்கிறார். 
 
ஆனால் இப்போது அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது மீண்டும் அவரை டாப் கியரில் கொண்டு போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற படத்தில் ஹன்சிகா நடித்து உள்ள நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அவருடன் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.