1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (11:34 IST)

டுவிட்டரை அடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இணையும் வைரமுத்து!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து டுவிட்டரில் கடந்த சில வருடங்களாக உள்ளார் என்பதும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆக்கபூர்வமான அரசியல் மற்றும் தமிழ் குறித்த கருத்துகளை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்ததே. அவருக்கு டுவிட்டரில் மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் டுவிட்டரை அடுத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இணைய உள்ளதாக வைரமுத்து அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: உலகத் தமிழர்களே!
 
பேஸ்புக் - இன்ஸ்டாகிராம்
இரண்டிலும் இணைகிறேன்  -
தமிழோடு உரையாடவும்; 
தமிழரோடு உறவாடவும்.
 
நிழல் உடலைத் தொடர்வதுபோல்
நீங்களும் என்னைப் பின்தொடரலாம்.
 
வல்லமை கொள்வோம்;
நல்லவை வெல்வோம்.
 
மேலும் அவர் தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் லிங்கையும் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த லிங்குகள் இதோ: 
 
 
Facebook : https://facebook.com/Vairamuthu-104778371717664
Instagram : https://instagram.com/vairamuthuoffl/