ரஜினி, விஜய்யுடன் இணைந்த தீபிகா படுகோனே
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையதளபதி விஜய் ஆகியோர்களின் படங்கள் செய்த சாதனை ஒன்றை தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவத்' திரைப்படமும் செய்துள்ளதாக இந்தியாவே பெருமைப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள மிகப்பெரிய திரையரங்கம் கிராண்ட் ரெக்ஸ். 1300 பால்கனி இருக்கைகளும், 1500 தரைத்தள இருக்கைகளும் என மொத்தம் 2800 இருக்கைகள் கொண்ட இந்த பிரமாண்டமான திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் இந்திய, தமிழ் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி', இரண்டாவது இந்திய, தமிழ் படம் விஜய்யின் 'மெர்சல்
இந்த நிலையில் கபாலி, மெர்சல் படங்களை அடுத்து இந்த திரையரங்கில் வரும் 26ஆம் தேதி இரவு 7.30 மணி காட்சியாக தீபிகா படுகோனேவின் 'பத்மாவத்' திரைப்படம் திரையிடப்படுகிறது. ரஜினி, விஜய் சாதனையில் தீபிகா படுகோனேவும் இணைந்துள்ளது இந்திய திரையுலகிற்கு கிடைத்த இன்னொரு பெருமை ஆகும்