1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (11:58 IST)

சரியில்லாத சிஸ்டம்; அதில் ரஜினியின் பங்கு: உண்மை கண்டறியும் சோதனை!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கிவிட்டார். உறுப்பினர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. கட்சிக்கான பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். ஆதரவும், எதிர்ப்பும் கலந்துகட்டி தமிழக அரசியலை கலக்கி வருகிறது.

 
நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து சிஸ்டம் சிரியில்லை என்று கூறிவருகிறார். அவர் குறித்தான தொலைக்காட்சி விவாதங்களில் இது முக்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சிஸ்டம் சரில்லை என கூறிவரும் ரஜினி குறித்து அதிரடியான கருத்து ஒன்றை கூறியுள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் ராம சுப்பிரமணியன்.
 
பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் ரஜினி குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ராம சுப்பிரமணியன், ரஜினிகாந்த் தொடர்ந்து சிஸ்டம் சரியில்லை என்று கூறி வருகிறார். சிஸ்டம் சரியில்லை என்று அவர் கூறுவதால் இதை கேட்கிறேன். சரியில்லாத சிஸ்டத்தில் ரஜினியின் பங்கு என்ன? 1975 முதல் ரஜினி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
 
பழையதை விட்டு விடுவோம். 2000 ஆண்டு முதல் எடுத்துக் கொள்ளலாம். இன்று வரை உள்ள இந்த 17 ஆண்டுகளில், ரஜினி நடித்த திரைப்படங்களுக்கான ஊதியங்களில், கருப்பு எவ்வளவு, வெள்ளை எவ்வளவு என்பதை ரஜினி வெளிப்படையாக அறிவிப்பதோடு, அதை மக்கள் நம்புவதற்காக, அவர் தன்னை உண்மை கண்டறியும் சோதனைக்கு தானாக முன்வந்து உட்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியில்லாத சிஸ்டத்தில் இவர் பங்கு என்ன என்பது புரியும் என அவர் கூறியுள்ளார்.