திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (17:05 IST)

விளம்பரப்பிரியர் ரஜினி அரசியலுக்கு தகுதியற்றவர்: சமூக ஆர்வலர் அதிரடி!

நடிகர் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து விட்டார். இதனையடுத்து அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகிறார். இந்நிலையில் ரஜினியை எதிர்ப்பவர்கள் வரிசையில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி இணைந்துவிட்டார்.
 
நடிகர் ரஜினி அரசியலுக்கு வர கூடாது என நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் நடிகர் கமல்ஹாசனும் தீவிர அரசியலில் இறங்க தயாராகி வருகிறார்.
 
இந்நிலையில் தனது மக்கள் பாதுகாப்பு கழகத்தின் ஐந்தாம் ஆண்டு விழாவில் பேசிய சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ரஜினி மற்றும் கமலை விமர்சித்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களுக்கு மக்கள் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள், வாக்களிக்க மாட்டார்கள். இருவருமே விளம்பரப்பிரியர்கள், இரண்டு பேரும் அரசியலுக்கு தகுதியற்றவர்கள் என கூறினார்.