செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 23 ஜனவரி 2022 (11:25 IST)

மனைவியை அடுத்து செல்வராகவனுக்கும் கொரோனா!

பிரபல இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது செல்வராகவனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது, ‘ சற்று முன் சோதனை செய்து பார்த்த போது தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும், இதனை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் வெளியே செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து  கொள்ளுங்கள் என்றும் செல்வராகவன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.