செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 ஜனவரி 2022 (09:05 IST)

வீட்டில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம்: அமைச்சர் அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் பரிசோதனை வீட்டில் செய்ய வேண்டாம் என்றும் வீட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது தவறு என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தனியார் நிறுவனங்கள் கொரோனா பரிசோதனை கருவிகளை விற்று வரும் நிலையில் அந்தக் கருவிகளைக் கொண்டு வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்வது பாதுகாப்பானது அல்ல என்று அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
அங்கீகரிக்கப்பட்ட லேப்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தான் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யவேண்டுமென்றும் வீட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது முழுக்க முழுக்க தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்