வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (08:29 IST)

சக்ராவை அடுத்து ’துப்பறிவாளன் 2’ படத்திற்கும் பிரச்சனையா? விஷால் அதிர்ச்சி

விஷால் நடித்த சக்ரா திரைப்படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் டிரையன் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது என்பதும் இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி விஷால் மற்றும் இயக்குனர் ஆனந்தன் ஆகிய இருவருக்கும் சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த வழக்கு முடியுமா அதன் பின்னரே சக்ரா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் விஷாலின் சக்ரா படத்தை அடுத்து தற்போது ’துப்பறிவாளன் 2’ படத்திற்கும் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை மிஷ்கினிடம் இருந்து முழுமையாக எழுதி வாங்கிய விஷால் மீதி படத்தை அவரே இயக்க இருப்பதாக அறிவித்தார் 
 
இந்த நிலையில் மிஷ்கின் தம்பி ஆதித்யா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும், மீண்டும் ஒரு சில நாட்கள் அவர் கால்சீட் கொடுத்து நடித்து கொடுத்தால் மட்டுமே இந்த படம் முழுமை அடையும் என்றும் தெரியவருகிறது 
 
இதனை அடுத்து மிஷ்கின் தரப்பிடம் தம்பியை நடிக்க அனுப்புங்கள் என்று கூறியதற்கு மிஷ்கின் தரப்பினர் பல கண்டிஷனைப் போடுவதாக தெரிகிறது. இதனை அடுத்து மிஷ்கின் தம்பியின் கேரக்டரை அப்படியே தூக்கி விட்டு அதற்கு பதிலாக புதிய கேரக்டரை உருவாக்கி வேறொரு நடிகரை நடிக்க வைக்க விஷால் தரப்பு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்