1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (08:25 IST)

சிலைக்கடத்தல் கதையில் விஷால்-ஆர்யா: இயக்குனர் யார்?

சிலைக்கடத்தல் கதையில் விஷால்-ஆர்யா
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சிலை கடத்தல் விவகாரம் என்பது தெரிந்ததே. இதன் அடிப்படையில் ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளார் பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் 
 
இந்த கதையில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கவுள்ளனர். ஏற்கனவே பாலாவின் ’அவன் இவன்’ படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தில் விஷால் நாயகனாகவும் ஆர்யா வில்லனாகவும் நடிக்க உள்ளனர் என்பதும் இருவருக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாட்டில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே பா.ரஞ்சித்தின் ‘சல்பேட்டா’ மற்றும் ’அரண்மனை 3’ ஆகிய படங்களில் ஆர்யா நடித்து வருகிறார். அதேபோல் விஷால் தற்போது ’சக்ரா’ மற்றும் ’துப்பறிவாளன் 2’ ஆகிய இரண்டு படத்திலும் நடத்தி வருகிறார். இருவரும் தங்களுடைய அடுத்தடுத்த படங்களை முடித்துவிட்டு ஆனந்த் ஷங்கர் படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது