வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 25 மார்ச் 2019 (10:46 IST)

ராதாரவிக்கும் விஷாலுக்கும் சேர்த்து டோஸ் விட்ட வரலட்சுமி!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா குறித்து பொதுமேடையில் ராதாரவி பேசிய அவதூறு பேச்சுக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் தொடர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 
 

 
கொலையுதிர்காலம் ட்ரைலரில் , முன்னெல்லாம், சாமியாக நடிக்க கே.ஆர். விஜயா போல கையெடுத்து கும்பிடும் முகங்களை படங்களில் நடிக்க வைப்பார்கள். இப்போது, கைதட்டி கூப்பிடத் தோன்றும் நடிகைகளை சாமியாக நடிக்க வைக்கிறார்கள் என்றும் சீதாவாகவும் நயன்தாரா நடிக்கிறார், பேயாகவும் நடிக்கிறார் என ராதாரவி விமர்சித்தார்.


 
இந்த சர்ச்சை பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தங்களது கண்டனங்களை தெரிவித்துவரும் நிலையில் தற்போது இதுகுறித்து நடிகை வரலட்சுமி, " ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படும் சினிமா சங்கங்கள் இது குறித்து எதுவும் செய்யாது. ஆனால் பெண்களை ஆதரிப்பது போன்று நடிக்கும். உண்மையில் படத்திலோ, நிஜத்திலோ பெண்கள் அசிங்கப்படுதவற்கான சூழல் ஏற்பட காரணமாக அவர்கள் உள்ளார்கள் "  என ரதரவியுடன் சேர்த்து விஷாலுக்கும் டோஸ் விட்டுள்ளார் வரலட்சுமி.