புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 16 மார்ச் 2019 (17:28 IST)

ஐதராபாத்தில் கோலாகலமாக நடந்த விஷால் அனிஷா திருமண நிச்சயதார்த்தம்!

விஷால் - அனிஷா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நிலையில், இந்த நிகழ்ச்சியில் நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்றனர்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். தமிழ் சினிமாவில் பல ஆக்க்ஷன் படங்களில் நடித்து அதிரடி நாயகனாக வலம் வந்தார்.
 
சமீபத்தில் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணனை விஷால் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி இன்று ஐதராபாத்தில் உள்ள தனியார் சொகுசு ஓட்டல் ஒன்றில் பகல் 12 மணிக்கு விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷா ரெட்டிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 
 
இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், விஷாலின் நண்பர்கள், குஷ்பு, சுந்தர் சி, நந்தா, ரமணா, ஸ்ரீமன் மற்றும் பசுபதி மற்றும் உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். 
 
திருமண நிச்சயதார்தத்தை தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் மாதம் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது திருமணம் நடிகர் சங்கக் கட்டிடத்தில் வைத்து தான் நடைபெறும் என்று விஷால் அறிவித்திருந்தார். தற்போது இந்த கட்டிடம் கட்டி முடியும் நிலையில் இருப்பதால், திருமணம் அந்த கட்டிடத்தில் நடைபெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது.