திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 17 மார்ச் 2019 (09:45 IST)

விஷ்ணுவிஷால் - விக்ராந்த் இணையும் அதிரடி ஆக்சன் படம்!

தமிழ் திரையுலகில் இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் வழக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ரஜினி-அக்சயகுமார், ரஜினி-விஜய்சேதுபதி, மாதவன் - விஜய்சேதுபதி, ஜிவி பிரகாஷ்- சரத்குமார், உள்பட பல இரட்டை ஹீரோக்கள் படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று வருகின்றன.
 
அந்த வரிசையில் தற்போது விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இந்த தகவலை விஷ்ணு விஷால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அதிரடி ஆக்சன் படமான இந்த படம் குறித்த முழு தகவலும் விரைவில் வெளிவரும் என்று அவர் கூறியுள்ளார்.
 
விஷ்ணுவிஷால் கடந்த சில வாரங்களுக்கு முன் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டபோது காயம் ஏற்பட்டதால் முழு ஓய்வு எடுத்து வந்தார். தற்போது அவர் குணமடைந்துவிட்டதை அடுத்து அவர் நடித்து வரும் 'ஜகஜல கில்லாடி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளது.
 

சமீபத்தில் வெளியான விஷ்ணுவிஷாலின் 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது