புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: சனி, 16 மார்ச் 2019 (10:48 IST)

நெருக்கமான தோழியுடன் விஷாலுக்கு இன்று ஹைதராபாத்தில நிச்சயதார்த்தம்!

கடந்த ஜனவரி மாதம் நடிகர் விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது காதல் மற்றும் திருமணம் குறித்து அறிவிப்பை பகிரங்கமாக வெளியிட்டார். 
இதன்படி விஷால் ஹைதராபாத்தைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனையான அனிஷாவை காதலித்து வந்தது தெரியவந்தது. இவர்களது காதல் தற்போது திருமணத்தை நோக்கி நகர்ந்துள்ளது.  ஹைதராபாத்தில் இன்று விஷால் அனிஷா ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் இரு வீட்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்டமான நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. நட்சத்திர ஜோடிகளின் குடும்பத்தினர் ஏற்கனவே ஹைதராபாத்தில் தான் இருக்கிறார்கள். இன்று விஷால் அனிஷா ஜோடிக்கு எப்போது திருமணம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்கள். இந்த நிச்சயதார்த்த விழாவில் விஷாலின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்று பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக குஷ்பு மற்றும் அவரது கணவர் சுந்தர் சி நந்தா ரமணா ஸ்ரீமன் மற்றும் பசுபதி உள்ளிட்டோர் இந்த நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்க உள்ளனர். இந்த விழா முடிந்தவுடன் இன்று மாலை விஷால் பார்ட்டி வைக்கிறார். விஷால் திருமணம் குறித்து கூடுதல் தகவல் இன்று மாலை வெளியாகும்.