1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (16:10 IST)

திருப்பதியில் நடிகை ஸ்ரீதேவி: செல்பி எடுக்க முண்டியடித்த ரசிகர்கள்!

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது என்பதும் தற்போது ஊடகங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து கோவில்களும் திறக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கோவில்கள் திறக்கப்பட்டதை அடுத்து திருப்பதி கோவிலுக்கு பல நட்சத்திரங்கள் சென்று வருகிறார் என்பதும் அந்த வகையில் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி இன்று திருப்பதி கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினர். மேலும் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு அவருடன் செல்பி புகைப்படம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ரிக்சா மாமா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி அதன் பின்னர் பிரியமான தோழி, காதல் வைரஸ், தேவதையை கண்டேன் உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.