ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 29 செப்டம்பர் 2021 (19:32 IST)

திருப்பதிக்கு ஹெலிகாப்டரில் செல்லலாம் என்ற விளம்பரத்திற்கு டிடிடி தேவஸ்தானம் விளக்கம்!

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் செல்லலாம் என்று தனியார் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்துள்ள நிலையில் அந்த விளம்பரத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது
 
தனியார் நிறுவனம் விளம்பரம் ஒன்றில் திருப்பதி திருமலை கோவிலுக்கு ஹெலிகாப்டரில் செல்லலாம் என்றும் விஐபி தரிசன டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அது மட்டுமன்றி ஹெலிகாப்டர்களை சென்னை கோவை பெங்களூர் ஆகிய இடங்களையும் சுற்றி காட்டுவோம் என்றும் இதற்காக கட்டணம் ரூபாய் 1.11 லட்சம் என்றும் விளம்பரப்படுத்தி இருந்தது 
 
இந்த விளம்பரம் இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு விஐபி தரிசன டிக்கெட்டுகள் தர மாட்டோம் என்றும் விஐபிக்களிடம் இருந்து நேரடியாகவோ அல்லது அவர்கள் கடிதம் கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே விஐபி தரிசனம் தரப்படும் என்றும் எனவே இதுபோன்ற தனியார் நிறுவனத்தின் விளம்பரங்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது