திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (19:27 IST)

நயன்தாராவை அடுத்து திருப்பதி சாமி தரிசனம் செய்த பிரபல நடிகை!

பிரபல நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதலருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தார் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகியது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து பிரபல நடிகை பிரியா ஆனந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் வளாகத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கியுள்ளனர் 
 
மேலும் பிரியா ஆனந்த் திருப்பதி வந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரியாமணி தற்போது காசேதான் கடவுளடா மகன் உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
ஏற்கனவே நடிகர் பிரபு மற்றும் தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ, இயக்குனர்  வம்சி ஆகியோர் திருப்பதி சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது