புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (15:12 IST)

மைக் டைசனோடு ஷூட்டிங்… அதற்கு முன் திருப்பதியில் வழிபாடு!

நடிகர் விஜய் தேவாரகொண்டா படப்பிடிப்புக்காக அமெரிக்காவுக்கு செல்ல உள்ள நிலையில் குடும்பத்தோடு திருப்பதி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.

தென்னிந்தியாவில் வளரும் நட்சத்திரமாக உயர்ந்து வருகிறார் விஜய் தேவாரகொண்டா. இப்போது அவர் நடிக்கும் படத்தை பூரி ஜகன்னாத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டரை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் தேவாரகொண்டா. இந்த படத்துக்கு லைகர் (லைன் +டைகர்) என்ற பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை இந்தியின் முன்னணி இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய் பாக்ஸராக நடிக்கும் நிலையில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல குத்துச் சண்டை வீரரான மைக் டைசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. மைக் டைசன் ஏற்கனவே சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் மைக் டைசனுக்கு டப்பிங் கொடுக்க நடிகர் பாலகிருஷ்ணா சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

மைக் டைசன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க படக்குழு இம்மாத இறுதியில் அமெரிக்காவுக்கு செல்ல உள்ளது. அதற்கு முன்பாக விஜய் தேவார்கொண்டா தனது குடும்பத்தோடு திருப்பதிக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.