காதலனுக்கு முரட்டு முத்தம் கொடுத்த ஸ்ருதி ஹாசன் - வைரல் புகைப்படம்!
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழுந்து ஒருவரை பிரேக்கப் செய்தார். தற்போது மீண்டும் ராப் பாடகர் சந்தானு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில் காதலன் சந்தானு ஹசாரிகாவை பொது இடத்தில் கால் தூக்கியபடி முரட்டுத்தனமான முத்தமிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டு தீ போன்று வருகிறது.