செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 17 ஜூலை 2021 (22:01 IST)

சார்பட்டா படத்தில் முதலில் நடிக்க வேண்டியது யாருன்னு தெரிஞ்சா குமுறி அழுவீங்க!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் சார்பட்டா. இந்த படத்தில் ஆர்யாவோடு துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் 1980களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்ட இந்த படம் குத்துச்சண்டையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் பல முக்கிய படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன, அந்த வகையில் சார்பட்டா பரம்பரையும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஜூலை 22 அன்று வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரருக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. 

இந்நிலையில் இப்படம் குறித்த ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது இப்படத்தில் முதலில்  நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா தானாம். ஆனால், அவர் கடைசி நேரத்தில் வேண்டாம் என சொல்லிவிடவே ஆர்யாவை இயக்குனர் ஒப்பந்தம் செய்தாராம். மெட்ராஸ் படத்தின் போதே ஆர்யா ரஞ்சித்திடம் வாய்ப்பு கேட்டிருந்தாராம். அதனால் இந்த படத்தில் நடிக்க கேட்டவுடனே ஒப்பக்கொண்டதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதை கேட்டு சூர்யா ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.