1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 17 ஜூலை 2021 (12:16 IST)

மீரா மிதுன் மாதிரி இருக்கீங்க... கவர்ச்சி ரைசாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடைகளை அணிந்துக்கொண்டு கிளாமர் காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு தொடை கவர்ச்சியில் தூக்கியடித்துள்ளார். ஆனால், இதில் அவர்  பார்ப்பதற்கு மீரா மிதுன் போன்றே  இருப்பதாக கூறி கிண்டல் அடித்து வருகின்றனர்.