1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2023 (21:16 IST)

நடிகை ஷர்மிலி 48 வயதில் கர்ப்பம்....ரசிகர்கள் வாழ்த்து

sharmili
நடிகை ஷர்மிலி 48 வயதில் தான் கர்ப்பமாக இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் 90 களில் கவுண்டமணி, வடிவேலு, விவேக், வெண்ணிறாடை முர்த்தி ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமானவர் ஷர்மிலி.

இவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கவர்ச்சியாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதன்பின்னர், சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால், தன் 40 வயதில் ஐடி துறையைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது  நீதிபதிக்கு படித்துக் கொண்டிருக்கும் ஷர்மிலி,  சமீபத்தில் நடிகை வனிதா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில், தற்போது 48 வயதில் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.