ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 ஜூன் 2023 (15:05 IST)

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக செந்தில் பாலாஜியிடம் நீதிபதி விசாரணையா?

முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக செந்தில் பாலாஜி உடன் விசாரணை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
 
அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட அமைச்சர்  செந்தில் பாலாஜி தற்போது ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த நிலையில், கைது நடவடிக்கையில் நடந்த விவரங்கள் தொடர்பாக நீதிபதி அவரிடம் கேட்டறிய உள்ளார். மேலும்  அமலாக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி கோரி உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகவும் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி விசாரிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
 செந்தில் பாலாஜி உடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை முடிந்த பின்னரே அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் கோரிய மனு மீது நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Siva