1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 26 மே 2021 (10:05 IST)

கருப்பு பூஞ்சை பரவுவதற்கு காரணம் என்ன?

ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்துவது போன்றவற்றால் கருப்பு பூஞ்சை நோய் பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

 
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கருப்பு பூஞ்சை தொற்றை தொடர்ந்து வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றுகளும் கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், அதிகளவில் ஸ்டிராய்டு மருந்தை பயன்படுத்துவது, சுத்தப்படுத்தாமல் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவது, ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்துவது, படுக்கையை நீண்ட காலம் பயன்படுத்துவது போன்றவற்றால் கருப்பு பூஞ்சை நோய் பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.