செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 26 மே 2021 (11:30 IST)

தடுப்பூசிகள் வீணடிப்பதில் 3 ஆம் இடத்தில் தமிழகம்!

தடுப்பூசிகள் வீணடிப்பதில் 3 ஆம் இடத்தில் தமிழகம்!
கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதில் தமிழகம் (15.5%) மூன்றாவது இடத்தில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. \

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் சில பகுதிகளில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.
 
இந்நிலையில் மே 23 வரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பற்றி வெளியாகியுள்ள தரவுகளில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட பின் தங்கியுள்ளது. இதனிடையே, கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதில் தமிழகம் (15.5%) மூன்றாவது இடத்தில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி வீணடிப்பில் முதல் இரண்டு இடங்களில் ஜார்க்கண்ட் 37.7%, சத்தீஸ்கர் - 30.2% உள்ளது.