1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Corona fund second instalment date announced

கொரோனா நிதி இரண்டாவது தவணை எப்போது? – தமிழக அரசு அறிவிப்பு

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா நிதி இரண்டாவது தவணை வழங்குவது குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் முதற்கட்டமாக முன்னதாக ரூ.2 ஆயிரம் ரேசன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் தவணையாக ரூ.2000 ஜூன் 3ம் தேதி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் அடங்கிய பை வழங்கும் திட்டமும் அன்றே தொடங்க உள்ளது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தாய்க்கு கொரோனா; எந்த தொற்றும் இல்லாமல் பிறந்த குழந்தை! – உ.பியில் ஆச்சர்யம்!