நவீன மருத்துவத்தை அவதூறாக பேசிய பாபா ராம்தேவ்! – இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்
நவீன மருத்துவத்தை இழிவாக பேசியதாக பாபா ராம்தேவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள இந்திய மருத்துவ கவுன்சில் இழப்பீடு கோரியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ சங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், அளிக்க வேண்டிய மருந்துகள் குறித்து தகவல்களை பகிர்வதுடன், ஆதாரமற்ற போலி மருத்துவங்கள் குறித்தும் விளக்கம் அளித்து வருகிறது.
இந்நிலையில் நவீன மருத்துவம் குறித்து சமீபத்தில் பேசிய பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் நவீன மருத்துவத்தால் குணப்படுத்த இயலாத நோய்கள் என சிலவற்றை குறித்தும் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள இந்திய மருத்துவ சங்கம், நவீன மருத்துவத்தை அவதூறாக பேசியதற்காக 15 நாட்களுக்கும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.1000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.