புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (12:58 IST)

"அசுரன்" படத்தில் பிரபல நடிகை..! தனுஷை மிரட்டும் வில்லி இவர்தானா ?

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு அசுரன் என பெயர் வைத்துள்ளனர்.


 
இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விவசாயிகள் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் குடியரசு தினத்தன்று ஜனவரி 26ம் தேதி தொடங்க உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் , பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் முதன் முதலாக நடிகர் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் கிடைத்துள்ளது.  
 
இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நடிகை மஞ்சுவாரியர் "அசுரன்" படத்தில்  முக்கியமான வேடத்தி்ல் நடிக்கவிருக்கிறார்.இத்தகைய திறமையான நடிகையுடன் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.  
 
மேலும் அசுரன் படத்தில் தனுஷை மிரட்டவரும்  வில்லி மஞ்சுவாரியர் தான் என்ற தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.