ரவுடி பேபி படைத்த புதிய சாதனை: தளபதி ரசிகர்கள் அப்செட்!

Last Updated: சனி, 19 ஜனவரி 2019 (17:39 IST)
யுவன் சங்கர் ராஜா இசையில் கடந்த 21 ஆம் தேதி வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் தற்போது மீண்டும் புதிய சாதனை படைத்து விஜய் ரசிகர்களை அப்செட்டாக்கியுள்ளது. 
 
பிரபல அமெரிக்க ஊடகமான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் குழுமத்தின் பில்போர்டின் டாப் ஐந்து பாடல்களில் ஒன்றாக இடம் பிடித்து ரவுடி பேபி சாதனை படைத்தது. 
 
தற்போது இதனை தொடர்ந்து, விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் வீடியோ பாடலை முந்தியுள்ளது. 
 
ஆளப்போறான் தமிழன் பாடல் யூடியூப்பில், 9 கோடியே 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. ரவுடி பேபி பாடல் 9 கோடியே 65 லட்சத்தை தாண்டியுள்ளது. விரைவில் 10 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :