திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 16 ஜனவரி 2019 (16:28 IST)

அடேங்கப்பா..! மாரி 2 இம்புட்டு பெரிய சாதனை படைச்சுதா..!

நடிகர் தனுஷ், சாய் பல்லவி நடித்து சமீபத்தில் வெளியான மாரி 2படத்தில் இடம்பெற்ற "ரௌடி பேபி" பாடல் உலக அளவில் சாதனை படைத்துள்ளது. 


 
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த தனுஷின் மாரி 2 சிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை  மாறாக கலவையான விமர்சனங்ககளை பெற்று தோல்வியை தழுவியது . 
 
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய  இப்படத்தின் பாடல்களும் சொல்லிக்கொள்ளும் ஹிட் அடிக்கவில்லை. ஆனால் குறிப்பாக ரவுடி பேபி பாடல் மட்டும்  செம ஹிட்டானது . இந்த பாடல் அண்மையில் யூடியூப் தளத்தில் வெளியாகி உலக அளவில் அபார சாதனையை செய்துள்ளது. 


 
இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்ததையடுத்து யூடுயுபில் வெளியானது. வெளியான 17 மணி நேரத்திலேயே இப்பாடல் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை தக்கவைத்து. தற்போதுவரை  இந்த பாடலை 8 கோடிக்கும் அதிகமான பார்வையாலர்கள் பார்த்துள்ளனர். 
 
இந்நிலையில் தற்போது இந்த பாடல் உலக அளவில் மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது. அதாவது , இந்த பாடல் வெளிநாட்டு தளம் ஒன்றில் ட்ரெண்டிங்கில் 4வது இடத்தை தளம் அதனை தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது.