1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 ஜனவரி 2019 (16:03 IST)

பொங்கலுக்கு வேஷ்டி சட்டையுடன் களமிறங்கிய பிரபல நடிகை!!

நடிகை அதுல்யா ரவி பொங்கலுக்கு வேஷ்டி சட்டையுடன் வெளியிட்ட போட்டோ வைரலாகி வருகிறது.
 
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் காதல் கண் கட்டுதே, ஏமாலி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பிரபலமான நடிகை அதுல்யா ரவி வேஷ்டி சட்டையுடன் பொங்கலை கொண்டாடியுள்ளார்.  கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் எனவும் நம் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை அழியாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பொங்கல் வாழ்த்து சொன்ன அதுல்யாவிற்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை சொன்ன வண்ணம் உள்ளனர்.