வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 16 ஜனவரி 2019 (11:11 IST)

கொடநாடு வீடியோ: பொங்கல் எக்ஸ்க்லூசிவ் ரிலீஸ்; அதிமுக அமைச்சர் கலகல

கொடநாடு வீடியோ கட்டுக்கதையை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்துள்ளனர் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ ஒரு திட்டமிட்ட சதி என்றும், இந்த வீடியோ வெளியிட்டவர் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தமிழக ஆளுனரை சந்தித்து திமுக தலைவர் ஸ்டாலின் மனு ஒன்றை அளித்தார் பின்னர் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக நேர்மையான ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க உத்தரவிட வேண்டும். இது சம்மந்தமாக ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், குடியரசுத்தலைவரை திமுக எம்.பி.க்கள் சந்திப்பார்கள் என ஸ்டாலின் கூறினார்.
























இதற்கிடையே இந்த வீடியோவில் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரையும் தமிழகத்தில் இருந்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து எழும்பூர் குற்றவியை நீதிமன்றத்தில் நீதிபதி சரிதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபது சரிதா, போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களை காவலில் அனுப்ப முடியாது என கூறி அவர்களை விடுவித்தார். 
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை சரிக்க பலர் பகல் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கொடநாடு வீடியோ கட்டுக்கதையை பொங்கலுக்கு ரிலீஸ் செய்துள்ளனர் என அமைச்சர் கூறினார்.