புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 ஜனவரி 2019 (08:31 IST)

காதலரை கைப்பிடிக்கும் பிரபல தமிழ்ப்பட நடிகை: திருமணம் எப்போது?

தமிழ் திரையுலகின் இரு துருவங்களாகிய சிம்பு மற்றும் தனுஷூடன் ஒரே நேரத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ரிச்சா ரிச்சா கங்கோபாத்யாய். சிம்புவுடன் இவர் நடித்த 'ஒஸ்தி' திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியான இரண்டே வாரத்தில் தனுஷுடன் இவர் நடித்த 'மயக்கம் என்ன? திரைப்படம் வெளிவந்தது. இரண்டு படங்களும் வசூல் அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் அதன்பின் ரிச்சாவுக்கு வேறு தமிழ்ப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலரான ஜோ என்பவருடன் ரிச்சாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதனை ரிச்சா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜோவை பிசினஸ் பள்ளி ஒன்றில் சந்தித்ததாகவும், முதலில் நட்பு பின் காதல் ஏற்பட்டு தற்போது அடுத்தகட்டமாக திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் ரிச்சா தெரிவித்துள்ளார்.

பெங்காலி பெற்றோர்களுக்கு பிறந்து டெல்லியில் வளர்ந்த ரிச்சா, அமெரிக்காவில் நடந்த மிஸ் இந்தியா பட்டத்தை கடந்த 2007ஆம் ஆண்டு வென்றவர் என்பதும் 2013ஆம் ஆண்டுக்கு பின் திரையுலகில் இருந்து விலகிய ரிச்சா, அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலையில் எம்பிஏ பட்டம் முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.