பொங்கல் சிறப்புப் பேருந்து – முன்பதிவு வசூல் எவ்வளவு தெரியுமா ?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் சிறப்புப் பேருந்துகளில் முன்பதிவு மூலமாக தமிழக அரசு 9 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு தமிழக அரசு சார்பில் சுமார் 14,000 பஸ்கள் இயக்கப்பட்டன.
ஜனவரி 11 முதல் 14 ஆம் தேதி வரை நான்கு நாட்களில் இந்த சிறப்பு பஸ்களின் மூலமாக முன்பதிவு செய்து கிட்டதட்ட 1,88,000 பேர் பயனித்துள்ளனர். இந்த பயணிகள் மூலமாக முன்பதிவு கட்டணமாக சுமார் 9 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
இனி பொங்கல் பண்டிகை முடிந்து திரும்ப நகரத்துக்கு செல்ல இருப்பதால் மீண்டும் 17 ஆம் தேதியில் இருந்து திரும்பவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.