செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (17:55 IST)

’வா தமிழா வா’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரு பழனியப்பன் திடீர் நீக்கம். புதிய தொகுப்பாளர் யார்?

கடந்த சில வருடங்களாக கலைஞர் டிவியில் ’வா தமிழா வா’ என்ற நிகழ்ச்சியை இயக்குனர் கரு பழனியப்பன் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது அவர் நீக்கப்பட்டு விட்டதாகவும் அவருக்கு பதில் இந்த நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஜீ தமிழ் சேனலில் ’தமிழா தமிழா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த இயக்குனர் கரு பழனியப்பன் அதன்பின் திடீரென அந்த சேனலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ’வா தமிழா வா’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
 
இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென தற்போது அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கரு பழனியப்பனுக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி தொகுத்து வழங்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய கரு பழனியப்பன் இது குறித்து விளக்கம் அளித்த போது தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் விலகியதாகவும் வேறு எந்த பிரச்சனையும் சேனல் நிர்வாகத்திடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த  நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி இந்த நிகழ்ச்சியை எப்படி தொடங்கும் தொகுத்து வழங்குவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran