வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 24 ஜூலை 2018 (13:57 IST)

சினிமா ஆசை காட்டி பெண்களை சீரழித்த டுபாக்கூர் இயக்குனருக்கு அடி, உதை

ஈரோட்டை சேர்ந்த இரு இளம்பெண்களை நடிகையாக்குகிறேன் என ஆசை காட்டி ஏமாற்றி சீரழித்த ஒரு மோசடி பேர்வழி தர்ம அடி வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.

 
சினிமாவில் நடிக்க ஆசைப்படும் பெண்களை சிலர் ஏமாற்றி பணம் பறிப்பதும், பாலியல் பசிக்கு பயன்படுத்துவதும் பல வருடங்களாக நடந்து வருகிறது. 
 
ஈரோடு அருகேயுள்ள மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவிதா அதேபோல், கைகாட்டிவலசு என்கிற பகுதியை சேர்ந்தவர் ஓவியா. இவர்கள் இருவர்களை நடிகையாக்குறேன் எனக்கூறிய செல்வகுமார் என்கிற நபர், தான் சென்னையில் ‘கருப்புபூனை’ என்கிற படத்தை இயக்கி வருவதாக கூறியுள்ளார். 
 
மேலும், தன்னுடன் இருந்த ஒருவரை உதவி இயக்குனர் என்றும், மற்றொருவரை புரோக்கர் என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதை உண்மை என நம்பிய ஓவியாவும், கவிதாவும் தாங்கள் நடிகையாகப் போகிறோம் என்கிற கனவில் இருந்துள்ளனர்.
 
அவர்கள் மூவரும் சேர்ந்த கவிதாவிடம் 50 ஆயிரத்தையும், ஓவியாவிடம் ரூ.25 ஆயிரத்தையும் பணம் பறித்துள்ளனர். அதோடு, சென்னை அழைத்து சென்று அவர்கள் இருவரையும் படுக்கைக்கும் பயன்படுத்தியுள்ளனர். எப்படி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த அவர்களுக்கு கடைசி வரை எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதன் பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பது தெரிய வந்தது. அதன் பின் அவர்கள் சென்னையிலிருந்து ஈரோடு சென்று தங்கள் குடும்பத்தினரிடம் இதுபற்றி சொல்லி அழுதுள்ளனர்.
 
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வலசு எனும் பகுதிக்கு கோ மாதா பூஜை நடத்த அந்த மூவரும் வரும் செய்தி ஓவியாவிற்கும், கவிதாவிற்கும் தெரிய வர இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் கொடுத்து காத்திருந்தனர். 
 
அவர்களும் அங்கு வர, காத்திருந்த அவர்கள் அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தங்களை மோசம் செய்து ஏமாற்றிவிட்டதாக இரு பெண்களும் புகார் அளித்தனர்.