வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 ஜூலை 2018 (14:53 IST)

நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.



1990-களில் மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாகத் திகழ்ந்தவர் ஷகிலா. இவரது படம் வரும் போதெல்லாம், கேரள சூப்பர் ஸ்டார்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்டோரின் படங்களையே ஒத்திவைத்த வரலாறும் நிகழ்ந்துள்ளது. தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் குணச்சித்திரம், நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார் ஷகிலா.





ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படத்தை இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலாவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது.  இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.  அதில் நடிகை ரிச்சா சத்தா கேரளத்தின் பாரம்பரிய உடை அணிந்து ஒரு ஹோம்லி கலந்த மாடல் லுக்கில் காட்சியளிக்கிறார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.