திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (17:11 IST)

நாளை ஒரே நாளில் வெளியாகும் 10 தமிழ் படங்கள்!

வாரம் தோறும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அன்று தமிழ் படங்கள் வெளியாகுவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் நாளை 10 படங்கள் வெளியாக உள்ளது. 
குறைந்த பட்ஜெட் படங்கள் வசூல் ஈட்டும் வகையில், தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒவ்வொரு பட ரிலீஸுக்கும் தேதி குறித்து தரப்படுகின்றன. 
 
ஆனால், நாளை ஒரே நாளில் பத்து படங்கள் வெளியாவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் தயாரிப்பாளர் சங்கம் மீதும், கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
 
வெளியாக உள்ள 10 படங்கள்:
1. கஜினிகாந்த்
2. மணியார் குடும்பம் 
3. அரளி 
4. கடிகார மனிதர்கள் 
5.  எங்க காட்டுல மழை 
6. போயா
7. உப்பு புளி காரம்
8. காட்டு பய சார் இந்த காளி 
9. கடல் குதிரைகள் 
10. நாடோடி கனவு