லியோ ஆடியோ லான்ச் நிலாவுல நடக்க போகுது… செம்ம நக்கலாக பதிலளித்த மன்சூர் அலிகான்!
தமிழில் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம் மூலமாக இவர் உருவாக்கியுள்ள லோக்கிவெர்ஸுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் அக்டோபர் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீடு விரைவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சென்னை அல்லது மலேசியாவில் ஆடியோ வெளியீடு நடக்கும் என சொல்லப்பட்டு வருகிறது.
படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மன்சூர் அலிகானிடம் இதுபற்றி சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது “லியோ ஆடியோ லான்ச் நிலாவுல நடக்க போகுது” என தனக்கேயுரிய நக்கலான பாணியில் ஜாலியாக பதிலளித்துள்ளார்.