ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (08:10 IST)

'லியோ’ ஆடியோ விழாவுக்கு மூன்று பிரபலங்களுக்கு அழைப்பு.. யார் யார் தெரியுமா?

vijay
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. 
 
அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. 
 
சென்னையில் இந்த விழா நடைபெற உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
உலகநாயகன் கமல்ஹாசன், சியான் விக்ரம் மற்றும் தனுஷ் ஆகிய மூவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் மூவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 மேலும் இந்த விழாவில் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva