லியோ படத்தில் இந்த பிரபல நடிகையும் நடித்துள்ளாரா? லேட்டஸ்ட் அப்டேட்!
விஜய் நடிப்பில் லியோ லோகேஷ் இயக்கி வரும் லியோ திரைப்படம் இந்த ஆண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்போது லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் இசை வெளியீடு நடக்கும் என தெரிகிறது.
லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடிக்கின்றன. விக்ரம் ஹிட்டுக்கு பிறகு லோகேஷ் இயக்கும் படம் என்பதால் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் தான் நடித்துள்ளதாக நடிகை கிரண் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். லியோ படத்தில் தானொரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கிரண் தமிழ் சினிமாவில் ஜெமினி, அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.