வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (13:05 IST)

விஜய் அரசியலுக்கு வந்தா உங்களுக்கு என்ன? – கலாய்த்த மன்சூர் அலிகான்!

Mansoor Ali khan
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் விரிவுப்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு நடிகர் மன்சூர் அலிகான் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து தயாராகியுள்ள படம் லியோ. இந்த படம் அக்டோபரில் வெளியாக உள்ள நிலையில் இதற்கு ரசிகர்கள் ஒருபக்கம் காத்திருக்கும் நிலை இருக்க, மறுபுறம் தனது அரசியல் நகர்வுக்காக தொடர்ந்து காய்களை நகர்த்தி வருகிறார் விஜய். அந்த வகையில் சமீபத்தில் நடந்த விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளது.

இதுகுறித்து லியோவில் விஜய்யுடன் நடித்த மன்சூர் அலிகானிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது பேசிய அவர் “விஜய் அவரது ஐடி விங்கை விரிவுப்படுத்தினால் அதை செய்யட்டும். அவர் எதுவுமே செய்யாமல் வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருக்க வேண்டுமா? அவர் அரசியலுக்கு வந்தால் வரட்டும். அவர் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு என்ன பிரச்சினை?” என கலாய்க்கும் விதமாக பதில் அளித்துள்ளார்.

மன்சூர் அலிகான் முன்னதாக நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல்களில் போட்டியிட்டவர் என்பதும், பின்னர் நா.த.கவிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K