புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 13 ஜூன் 2020 (09:31 IST)

நடிகர் விஜய்யின் பாதுகாவலர் திடீர் மரணம்...!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருபவர் நடிகர் விஜய். தமிழகத்தையும் தாண்டி உலகம் முழுக்க இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

வருகிற ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த ஆண்டு எனக்கு பிறந்தாள் கொண்டாட்டம் எதுவும் வேண்டாம்.. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து பொறுப்புடன் இருப்போம் என அன்பு கட்டளை விடுத்தார்.

தன் ரசிகர்கள் மீது இவ்வளவு அன்பும் அக்கறையும் கொண்ட விஜய்க்கு தற்போது பெரும் சோகம் நேர்ந்துள்ளது. ஆம் விஜய்யின் பாதுகாவலர் தாஸ் சேட்டன் காலமாகியுள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் பற்றிய எந்த தகவலும் இன்னும் கிடைக்கவில்லை. கேரளாவை சேர்ந்த இவர் பவன் கல்யாண் போன்ற முன்னணி நடிகர்களின் நம்பிக்கையான பாதுகாவலராக பணியாற்றியிருக்கிறார். அவருக்கு நடிகர் பிரிதிவ்ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.