திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (17:38 IST)

பசிக்கு தடுப்பூசி இருக்கா? OMG விஜய் சேதுபதி டிவிட்!!

நடிகர் விஜய் சேதுபதி பசிக்கு தடுப்பூசி கண்டுபிடியுங்க என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது கட்டமாக மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த ஊரடங்கால் கொரோனா குறைகிறதோ இல்லையோ மக்கள் பசியால் வாடுவது அதிகரித்துள்ளது. 
 
இதனை சுட்டிக்காட்டும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில், பசி என்றொரு நோய் இருக்கு. அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும், ஓ மை கடவுளே!!! என பதிவிட்டுள்ளார்.