திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 20 மே 2020 (12:22 IST)

லாக்டவுன் முடிந்ததும் வெளியாகப்போகும் விஜய் சேதுபதியின் படம்!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்போதைக்கு திரையரங்குள் திறக்க வாய்ப்பில்லை என்றும், இன்னும் குறைந்தது மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்தே திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தாலும் பல்வேறு படங்களின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் ஊரடங்கிலும் நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள "இடம் பொருள் ஏவல்" படத்தை லாக்டவுன் முடிந்தவுடனே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருப்பதி பிரதர்ஸ் சார்பில் லிங்குசாமி தயாரித்துள்ள இப்படத்தில் விஷ்ணு , நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி மக்கள் செல்வன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.