1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (16:31 IST)

விஜய்க்காக பேசிய ஜெ.அன்பழகன்: மலரும் நினைவுகள்!!

ஜெ.அன்பழகன் நடிகர் விஜய்யின் பட ரிலீஸுக்காக குரல் கொடுத்தது இப்போது நினைவுகூறப்பட்டுள்ளது. 
 
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62. 
 
திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு ஜூன் 10 ஆம் தேதியான இன்றுதான் பிறந்த நாள் என்பதும், பிறந்த நாளிலேயே அவர் மரணம் அடைந்திருப்பது பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 
 
இவரது மரணத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இவரை நினைவு கூறும் சில விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அவற்றில் ஒன்று இவர் நடிகர் விஜய்யின் பட ரிலீஸுக்காக பேசியது. 
 
ஆம், நடிகர் விஜய்யின் தலைவா படத்தை வெளியிடுவதில் சிக்கல் வந்த போது தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் படத்தை வெளியிட தயார் என அறிவித்தார் ஜெ.அன்பழகன். அதோடு, அன்பு பிக்சர்ஸ் என்ற பெயரில் ஜெயம் ரவியின் ஆதிபகவான், யாருடா மகேஷ் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார்.